For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பரபரப்பு...! இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய வழக்கு...! நாளை முடிவை அறிவிக்கும் தேர்தல் ஆணையம்...!

05:58 AM Mar 28, 2024 IST | Vignesh
பரபரப்பு     இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய வழக்கு     நாளை முடிவை அறிவிக்கும் தேர்தல் ஆணையம்
Advertisement

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரியும், தனக்கு வாளி சின்னம் ஒதுக்கக்கோரியும் ஓ.பி.எஸ். முறையீடு மனு மீது நாளை முடிவை அறிவிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் அகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. இரண்டு விதமான கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றி உள்ளதாக கூறி ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்; இரட்டை இலை சின்னத்தை தனது தலைமையில் இருந்த மதுசூதனனுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியது. இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்கக் கூடாது என கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தை அணுக தடையில்லை. இந்த வழக்கில் தற்போது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி, இறுதி விசாரணைக்காக இந்த வழக்கை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதை அடுத்து ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி திறப்பு நடக்க வழங்க கூடாது எனக் கூறி மனு தாக்கல் செய்திருந்தார். இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரியும், தனக்கு வாளி சின்னம் ஒதுக்கக்கோரியும் ஓ.பி.எஸ். முறையீடு மனு மீது நாளை முடிவை அறிவிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement