தேர்தல் விதி மீறல்...! எல்.முருகன் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்கு பதிவு...!
நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான 18-வது மக்களவைத் தேர்தலில், முதல் கட்டமாக இன்று நடைபெறவுள்ள தேர்தலுக்கு வாக்காளர்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும்.
நீலகிரி மக்களவை தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், ஆ ராசா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். நேற்று முன்தினம் பிரச்சாரம் ஓய்ந்தது. இதனையடுத்து தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மேட்டுப்பாளையம் பகுதியில் இருசக்கர வாகன பேரணி சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மேட்டுப்பாளையம் பகுதியில் இருசக்கர வாகன பேரணி சென்றதாக தேர்தல் பறக்கும்படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பாஜகவினர் 33 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.