For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மகிழ்ச்சி செய்தி...! Point to Point... கிளாம்பாக்கம் செல்ல 10 நிமிட இடைவெளியில் ஒரு பேருந்து...!

06:00 AM Jan 25, 2024 IST | 1newsnationuser2
மகிழ்ச்சி செய்தி     point to point    கிளாம்பாக்கம் செல்ல 10 நிமிட இடைவெளியில் ஒரு பேருந்து
Advertisement

கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு செல்ல 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நீண்ட தூரப் பேருந்துகள் 30.12.2023 முதல் கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இப்பேருந்து முனையத்தை இணைக்கும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் இரயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி, தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளோடு, கூடுதலாக மாநகரப் போக்குவரத்துக் கழகமானது தடம் எண்.M18-ல் 6 பேருந்துகளை இடைநிறுத்தமில்லா பேருந்துகளாக (Point to Point) 10 நிமிட இடைவெளியில் 25.01.2024 அன்று முதல் அதிகாலை 03 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொடர்ந்து இயக்க உள்ளது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

கிளம்பாக்கம்

இன்று இரவு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகருக்குள் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ ஆம்னி பேருந்துகள் அனுமதிக்கப்படமாட்டாது எனவும், இ.சி.ஆர். சாலை மார்க்கம் நீங்கலாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே புறப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Tags :
Advertisement