மத்திய அரசு ஊழியர்களுக்கு 186% சம்பள உயர்வு..? டிசம்பரில் வெளியாக உள்ள குட்நியூஸ்..!
8-வது ஊதியக் குழு அமைப்பது தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மத்திய அரசு ஊழியர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் அரசு ஊழியர்களுக்கு ஒரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது. 8வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு 186% சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டு ஆலோசனை இயந்திரங்களின் தேசிய கவுன்சில் JCM-ன் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா, குறைந்தபட்ச ஃபிட்மெண்ட் காரணி 2.86 ஆக இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.. இது 7வது ஊதியக் குழுவின் கீழ் உள்ள 2.57 பொருத்தக் காரணியை விட 29 அடிப்படை புள்ளிகள் அதிகம். ஒருவேளை இந்த ஃபிட்மெண்ட் காரணி 2.86 ஆக உயர்த்தப்பட்டால் குறைந்தபட்ச சம்பளம் ரூ.51,480 ஆக உயரும்..
தற்போதைய ரூ.18,000 உடன் ஒப்பிடும்போது, குறைந்தபட்ச சம்பளம் கணிசமாக உயரும். ஃபிட்மெண்ட் காரணி அதிகரிக்கும் பட்சத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியமும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8வது ஊதியக் குழுவின் கீழ், ஓய்வூதியங்கள் தற்போதைய ரூ.9,000 உடன் ஒப்பிடும்போது 186% அதிகரித்து ரூ.25,740 ஆக உயரும் என கூறப்படுகிறது..
புதிய ஊதியக் குழுவிற்கான அதிகாரப்பூர்வ தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அடுத்த பட்ஜெட்டில் (2025-26) அது அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024-25 பட்ஜெட்டில் இந்த கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர் சங்கங்கள் அமைச்சரவை செயலாளர் மற்றும் நிதி அமைச்சகத்தை அணுகின. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்த மாதம் ஒத்திவைக்கப்பட்ட JCM தேசிய கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு டிசம்பரில் 8வது ஊதியக் குழு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் ஊழியர் சங்கங்கள் 8-வது ஊதிய கமிஷனை உருவாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோடிக்கை விடுத்தது.
தற்போது இருக்கும் 7-வது ஊதியக் குழு 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. இது அரசு ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வுக்கு வழிவகுத்தது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் செயல்படுத்தப்பட்டன, இதனால் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.7,000 இலிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது.
ஒரு ஊதியக் குழு பொதுவாக ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் உருவாக்கப்படுகிறது, இருப்பினும் சட்டப்பூர்வ கட்டாயம் எதுவும் இல்லை. இது ஒரு மரபு மட்டுமே. 7-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு 10 நிறைவடைந்து விட்டதால் 8-வது ஊதியக் குழு தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது, 10 மில்லியனுக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : 7 நகரங்களில் வீடுகளின் விலை ஜெட் வேகத்தில் உயர்வு…! அதுவும் இத்தனை கோடியா? சென்னையும் லிஸ்ட்ல இருக்கு..