முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிர்ச்சி!!! 5 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை...

5-years-old-girl-was-raped-by-her-father
06:40 PM Nov 29, 2024 IST | Saranya
Advertisement

28 வயது பெண் ஒருவர், திருவிக நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்த நிலையில், இவருக்கு 5 வயதான மகள் உள்ளார். இவரது கணவர், ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள், அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் யுகேஜி படித்து வருகிறாள். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது தாய் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர், குழந்தை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையடுத்து, குழந்தைக்கு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தையிடம், தாய் மற்றும் மருத்துவர்கள் நடந்ததை குறித்து விசாரித்துள்ளனர், அப்போது குழந்தையின் தந்தை குழந்தைக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த தாய், இந்த சம்பவம் குறித்து செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இன்ஸ்பெக்டர் செண்பகதேவி தலைமையிலான போலீசார் நேற்று காலை குழந்தையின் தந்தையை கைது செய்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். பெற்ற தந்தையே தனது மகளை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read more: 3-வது திருமணம் செய்து கொண்ட சர்ச்சை பெண் சாமியார் அன்னபூரணி..!! இனி ஜோடியாக இதை செய்யப்போகிறார்களாம்..!!

Tags :
chool girlDaughterfatherukg
Advertisement
Next Article