25 வயது இளம்பெண்ணை கதற கதற கூட்டு பலாத்காரம் செய்த 5 கொடூரன்கள்..!! இணையத்தில் லீக்கான அதிர்ச்சி வீடியோ..!!
உத்தரப்பிரதேசத்தில் ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவில் உள்ள ஹோம்ஸ்டே ஒன்றில் பணிபுரியும் 25 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மோசமாக தாக்கப்பட்டதாக உபி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண் பணிபுரிந்த ஹோம்ஸ்டேயில் கடந்த சனிக்கிழமை இரவு இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ஆண்களில் ஒருவர்தான் அந்த பெண்ணை மிரட்டி இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். தன்னுடைய ஆபாச வீடியோ ஒன்றை காட்டி, தன்னை மிரட்டி இப்படி இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
மேலும், அவர் மது அருந்த வற்புறுத்தப்பட்டதுடன், அவரது தலையில் கண்ணாடி மதுபாட்டில் உடைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கூட்டு பாலத்காரத்தின் போது தான் மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டதாக அந்த பெண் புகார் அளித்துள்ளார். பெண் ஒருவர் அறைக்குள் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோக்கள் தற்போது வெளியாகி உள்ளது.
ஆண் ஒருவர் ஹோட்டல் பணியாளர்களுக்கு முன் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லும் வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அந்த பெண் உதவிக்காக கெஞ்சும் போது தாக்கப்படும் வீடியோக்கள், கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டு பீர் பாட்டில்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியாகியுள்ளன.