ஒரே வாலிபருடன், 4 சிறுவர்கள் ஓரினசேர்க்கை; செங்கல் சூளையில் நடந்த அசிங்கம்...
திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், 26 வயது வாலிபர் ஒருவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் வேலை செய்து வரும் அந்த பள்ளியில் படித்த மாணவர் ஒருவர், தற்போது பாளையங்கோட்டையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு, அங்குள்ள செங்கல் சூளை ஒன்றில், கல்லூரி மாணவர் உட்பட நான்கு பேரும், அலுவலக உதவியாளரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அதனை அந்த சிறுவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோவை அலுவலக உதவியாளரிடம் காண்பித்து செல்போன் மற்றும் பணத்தை மிரட்டி வாங்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அலுவலக உதவியாளர், சம்பவம் குறித்து பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேரும் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இளம் வயதிலேயே மாணவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் மிகப்பெரிய பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
Read more: