For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நீண்ட கால இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மேலும் 3 மாதம் ஜாமீன்...! உயர் நீதிமன்றம் உத்தரவு...!

07:00 AM Jan 12, 2024 IST | 1newsnationuser2
நீண்ட கால இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மேலும் 3 மாதம் ஜாமீன்     உயர் நீதிமன்றம் உத்தரவு
Advertisement

நீண்டகாலமாக சிறையிலுள்ள எஸ்.ஏ.பாஷா, ஜாகிர் உசேன், சாகுல் ஹமீது, விஜயன், பூரி கமல் ஆகியோருக்கு 3 மாத பரோல் நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 13 கைதிகளுக்கு 40 நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் நீண்டகாலம் சிறையில் உள்ள 49 சிறைவாசிகளின் நன்னடத்தையை முன்னிட்டு முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி அவர்களது குடும்பத்தினர் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, முதலமைச்சரின் பரிந்துரையின்பேரில் 49 சிறைவாசிகளை நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான பரித்துரையை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளதாகவும், அந்த பரிந்துரைகள் நிலுவையில் உள்ளதாக கூறி இருந்தார்.

தங்களுக்கு வழங்கப்பட்ட பரோலை நீட்டிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் நீதிமன்றத்தில் ஆஜராகி, நன்னடத்தை அடிப்படையில் சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

இதனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பரோலை நீடிக்க வேண்டும் என வாதிட்டார். அனைத்து திறப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நீண்டகாலமாக சிறையிலுள்ள எஸ்.ஏ.பாஷா, ஜாகிர் உசேன், சாகுல் ஹமீது, விஜயன், பூரி கமல் ஆகியோருக்கு 3 மாத பரோல் நீட்டித்தும், 13 கைதிகளுக்கு 40 நாள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டார்.

Tags :
Advertisement