For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாவ்..! சுற்றுலாப் பயணிகளுக்கான 24x7 கட்டணமில்லா உதவி மையம்...!

24x7 toll-free helpline for tourists
06:13 AM Dec 13, 2024 IST | Vignesh
வாவ்    சுற்றுலாப் பயணிகளுக்கான 24x7 கட்டணமில்லா உதவி மையம்
Advertisement

இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான 24x7 கட்டணமில்லா உதவி மையம் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கான 24x7 கட்டணமில்லா உதவி மையத்தை சுற்றுலா அமைச்சகம் 08.02.2016 அன்று தொடங்கியது. இதில் ஆங்கிலம், இந்தி தவிர பத்து (10) சர்வதேச மொழிகளில் சேசை வழங்கப்படுகிறது. இச்சேவை 1800-11-1363 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஆண்டின் 365 நாட்களும் அனைத்து நேரங்களிலும் கிடைக்கும்.உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியாவில் பயணம் மற்றும் சுற்றுலா தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான ஆதரவு சேவையை வழங்கும்.

Advertisement

இந்தியாவில் பயணம் செய்யும் போது தேவைப்படும் நேரங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அழைப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதும், தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எச்சரிப்பதும் இந்த பன்மொழி உதவி மையத்தின் நோக்கமாகும்.உதவி மையம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை வந்த அழைப்புகளின் எண்ணிக்கை சுமார் 7.9 லட்சமாகும்.

Tags :
Advertisement