For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சனி பகவான் கொடுக்கப்போகும் திடீர் அதிர்ஷ்டம்..! இனி இந்த 3ராசிக்காரர்களுக்கும் கொண்டாட்டம் தான்.!

07:06 AM Jan 23, 2024 IST | 1newsnationuser5
சனி பகவான் கொடுக்கப்போகும் திடீர் அதிர்ஷ்டம்    இனி இந்த 3ராசிக்காரர்களுக்கும் கொண்டாட்டம் தான்
Advertisement

சனிபகவான் வாழ்க்கையில் பல்வேறு தொந்தரவுகளை கொடுக்க கூடியவராக தான் நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே சனி பகவான் பண வரவுக்கு பல்வேறு வகையிலும் உதவுவார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து சில ராசிகளின் மீது பார்வையை செலுத்தும் போது அந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படுகிறது. எனவே இவர்கள் சனி பகவான் மூலம் அனுகூலத்தை பெற முடியும். இதுவரை இருந்து வந்த கடன் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளும் அவர்களை விட்டு விலகி திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் திக்கு முக்காடி போவார்கள். இந்த வருடம் கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் அடுத்த ஆண்டு 2025 வரை அதே ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.

Advertisement

எனவே கீழே குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு திடீர் பண வரவு ஏற்படும். அவ்வாறு அதிர்ஷ்டத்தை பெறும் மூன்று ராசிகள் எவை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலை பார்க்கும் இடங்களில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இவர்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்களில் இருந்து நற்பலன்கள் கிடைக்கும். திருமணம் நடக்காமல் கவலையில் இருந்தவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்கும். குழந்தையின்மையில் மருத்துவமனை மருத்துவமனையாக சென்று கொண்டிருக்கும் உங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். வேலை செய்கின்ற இடத்தில் ஏதாவது தொந்தரவு இருந்து வந்தால் அவை நீங்கி சுமூகமான நிலை ஏற்படும்.

கடக ராசிக்காரர்கள் பல்வேறு சிக்கல்களால் அவதிப்பட்டு வந்து இருப்பார்கள். அந்த சிக்கல்கள் அனைத்தும் தீர போகின்ற காலகட்டம் இது. இவர்களுக்கு கிடைக்கும் திடீர் அதிர்ஷ்டத்தினால் பண வரவு பல வழிகளில் வரும். இவர்களது நிதிநிலைமையில் எதிர்பார்க்காத முன்னேற்றம் ஏற்படும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பும், முன்னேற்றமும் ஏற்படும். வியாபார ரீதியாக ஏற்படும் முன்னேற்றம் பண பிரச்சினைகளை தீர்க்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும். இதுவரை வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரக்கூடிய நேரம். கணவன், மனைவி மற்றும் குடும்ப உறவுகளிடம் அன்யோன்யமான நிலை உருவாகும்.

Tags :
Advertisement