முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பினை கைதிகளாக பிடிக்கப்பட்ட 17 இந்தியர்கள் - விடுவித்தது ஈரான்

06:25 AM May 05, 2024 IST | Baskar
Advertisement

கப்பலுடன் சிறைபிடிக்கப்பட்ட 17 இந்தியர்கள் உட்பட MSC ஏரீஸ் கப்பலின் அனைத்து பணியாளர்களையும் ஈரான் விடுவித்தது.

Advertisement

கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக கடற்பகுதியில் சென்ற, இஸ்ரேல் தொடர்புடைய 'MSC Arie's என்ற சரக்கு கப்பலை ஈரான் ராணுவம் கைப்பற்றியது. இந்த கப்பலில் பணியாற்றிய 17 இந்திய மாலுமிகள் உட்பட அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். மேலும் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த, கேரளாவின் திருச்சூரை சேர்ந்த பெண் கேடட் ஆன் டெஸ்ஸா ஜோசப் மட்டும் விடுவிக்கப்பட்டிருந்தார். இவர் ஏப்ரல் 18ஆம் தேதியே அவரது சொந்த மாநிலத்திற்கு திரும்பினார்.

ஈரான் - இஸ்ரேல் இடையிலான மோதலின்போது, ஐக்கிய அரபு அமீரக கடற்பகுதியில் இஸ்ரேல் தொடர்புடைய 'MSC Aries' சரக்கு கப்பல் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த சரக்கு கப்பலை ஈரான் ராணுவம் கைப்பற்றியது. மேலும் இந்த கப்பலில் இருந்த 17 இந்திய மாலுமிகள் உட்பட 25 பேரை சிறைபிடித்தது ஈரான்.

இந்த நிலையில் சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய மாலுமிகளின் விடுதலை தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசு. மேலும் சரக்கு கப்பலிலுள்ள இந்தியர்களுக்கு நிவாரணம், முன்கூட்டியே விடுதலை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தெஹ்ரான் மற்றும் டெல்லி உள்ள ஈரான் தூதரக அதிகாரிகளிடம் மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், 17 இந்திய மாலுமிகள் உள்பட அனைவரையும் விடுதலை செய்துள்ளது ஈரான். இதற்கு முன்னதாக, கைப்பற்றப்பட்ட போர்சுக்கீசிய கப்பல் மற்றும் எஸ்டோனிய குழுவினரை விடுவிப்பது தொடர்பான வழக்கில், எஸ்டோனிய தரப்பின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, அமிரப்டோல்லாஹியன், ஈரானின் பிராந்திய கடல் பகுதியில் ரேடாரை அணைக்கப்பட்டுள்ளதால் எங்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தில் உள்ளது, இதனால் நீதித்துறை விதிகளின் கீழ் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஈரான் ஏற்கனவே மனிதாபிமான அடிப்படையில் அனைத்து கப்பலின் பணியாளர்களையும் விடுவித்துள்ளதாகவும், கப்பலின் கேப்டன் அவர்களுடன் வந்தால், எஸ்டோனியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் தங்கள் நாட்டிற்கு திரும்பலாம் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

Read More: ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..? வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!

Tags :
iran release msc shipகப்பலுடன் சிறைபிடிக்கப்பட்ட 17 இந்தியர்கள்
Advertisement
Next Article