ஓடும் ஆம்புலன்ஸில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!! மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி..!!
மத்தியப்பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டம் ஹனுமனா தாலுகாவில் ஜனனி எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக 16 வயது சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியது.
அதில், சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்ததில், கடந்த 25ஆம் தேதி ஜனனி எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸில் வந்த இருவர் தன்னை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று, ஓடும் ஆம்புலன்ஸில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில், மௌகஞ்ச் மாவட்டத்தில் உள்ள நைகர்ஹி தாலுகாவில் வசிக்கும் வீரேந்திர சதுர்வேதி (ஆம்புலன்ஸ் ஓட்டுநர்), அவரது நண்பர் ராஜேஷ் கேவட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்தக் குற்றம் நடந்த அதே பகுதியில் கடந்த மாதம் 21ஆம் தேதி தேனிலவுக்குச் சென்ற தம்பதியில், புதுமணப் பெண்ணைக் கடத்திச் சென்று, 8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறியது. அதேபோல், கடந்த 26ஆம் தேதி தண்ணீர் எடுத்த பிற்படுத்தப்பட்ட இளைஞர் 8 பேரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளான நிலையில், இந்த செய்தியும் விவாதமாகியுள்ளது.