முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பரபரப்பு...! ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது...! வலைகள், ஜிபிஎஸ் கருவிகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர்...!

14 Rameswaram fishermen arrested.
06:56 AM Dec 05, 2024 IST | Vignesh
Advertisement

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் 2 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை கடுமையாக தாக்கி, வலைகள், ஜிபிஎஸ் கருவிகளை சேதப்படுத்தியதாகவும் படகுகளை மோத வைத்து சேதம் ஏற்படுத்தியதாகவும் கரை திரும்பிய மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். இவ்வாறு கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

மீனவர்களை சிறை பிடிப்பது மட்டும் இன்றி அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வது, மீன் பிடி பொருட்களை சேதப்படுத்துவது என பல்வேறு அட்டூழியங்களிலும் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. எனினும், இந்த விவகாரத்தில் இதுவரை உறுதியான தீர்வு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் 2 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை கடுமையாக தாக்கி, வலைகள், ஜிபிஎஸ் கருவிகளை சேதப்படுத்தியதாகவும் படகுகளை மோத வைத்து சேதம் ஏற்படுத்தியதாகவும் கரை திரும்பிய மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags :
Boatfisherman arrestRameshwaramsrilanka
Advertisement
Next Article