முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

களத்தில் 1,202 வேட்பாளர்கள் - மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடக்கம்..!

06:21 AM Apr 26, 2024 IST | Baskar
Advertisement

மக்களவைத் தேர்தல் 2ஆவது கட்டமாக இன்று 13 மாநிலங்களின் 88 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

Advertisement

மக்களவை தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் காலமானதால் மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் 2-ம் கட்டத்திலிருந்து 3-ம் கட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 5 கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

2024 பொதுத் தேர்தலின் 2-வது கட்டத்திற்கான வாக்குப்பதிவு இன்று 88 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. ஒரு சில தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் மாறுபடும். 2ஆம் கட்டத் தேர்தலுக்கு 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.2ஆவது கட்ட தேர்தலில் 15.88 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்த வாக்காளர்களில் 8.08 கோடி பேர் ஆண்கள், 7.8 கோடி பேர் பெண் வாக்காளர்கள், 5,929 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள்.

2-வது கட்ட தேர்தலில் 34.8 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். 6. 20 முதல் 29 வயதுக்குட்பட்ட 3.28 கோடி இளம் வாக்காளர்கள் உள்ளனர். 7. 2-ம் கட்டத் தேர்தலில் 1202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். (ஆண்கள் - 1098; பெண்கள்-102; மூன்றாம் பாலினத்தவர் - 02) 8. 4553 பறக்கும் படைகள், 5731 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 1462 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்க வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் எளிதில் வாக்களிக்க, வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறைகள், சாய்வுதளம், சக்கர நாற்காலிகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்கள் மற்றும் வாக்குப்பதிவு தேதி ஆகியவற்றை இந்த இணையதள இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம் https://electoralsearch.eci.gov.in/ 11. வாக்குச் சாவடிகளில் அடையாள சரிபார்ப்புக்காக வாக்காளர் அடையாள அட்டை (EPIC) தவிர 12 மாற்று ஆவணங்களையும் காண்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Read More: Burger | காதலியின் பர்கரை சாப்பிட்டதால் ஆத்திரம்.!! நண்பனை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் இளைஞன்.!!

Advertisement
Next Article