ஓரினசேர்க்கைக்கு மறுத்த 10 வயது சிறுவன்; ஆசனவாயில் இருந்த காயம்.. நெஞ்சை பதைபதைக்கும் கொடூர சம்பவம்..
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் முத்துராமலிங்க தெருவை சேர்ந்தவர் கார்த்திக் முருகன். இவருக்கு பாலசுந்தரி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இவர்களின் 2-வது மகன் 10 வயதான கருப்பசாமி, அருகில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கருப்பசாமி கடந்த ஒரு வாரமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து, நேற்று வழக்கம் போல் கார்த்திக் முருகனும், பாலசுந்தரியும் வேலைக்கு சென்று விட்டனர். இதனால், கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளான். அப்போது சிறுவன், தனது பாட்டியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பார்க்க வருமாறு அழைத்துள்ளார். இதனால் அந்த பாட்டியும் தனது பேரனை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
ஆனால் சிறுவன் வீட்டில் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பாட்டி தனது உறவினர்களுடன் சேர்ந்து சிறுவனை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து, தங்களின் மகனை காணவில்லை என்று, கருப்பசாமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான கருப்பசாமியை தேடி வந்தனர். இந்நிலையில், மறுநாள் சிறுவன் கருப்பசாமி, பக்கத்து வீட்டு மாடியில் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளான். இதையடுத்து, சிறுவன் கருப்பசாமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் பல மணி நேரத்திற்கு முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் குற்றவாளி பிடிபடாத நிலையில், எதிர் வீட்டைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்யும் கருப்பசாமி, சிறுவனை அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கைக்கு பலவந்தமாக உட்படுத்த முயற்சி செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. சிறுவனின் ஆசனவாய் மற்றும் வாய் பகுதிகளில் காயங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Read more: “மகளின் பிறப்புறுப்பில், தந்தை செய்த காரியம்..”; சொத்துக்காக நடந்த கொடூர சம்பவம்..