முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’10 நாளைக்கு முன்னாடி தான்’..!! ’பயமா இருக்கு’..!! டேனியல் பாலாஜி குறித்து நடிகை பகீர் வீடியோ..!!

01:55 PM Mar 30, 2024 IST | Chella
Advertisement

திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இந்த செய்தி ஒட்டுமொத்த திரை உலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவு குறித்து சீரியல் நடிகை தேவி பிரியா உருக்கமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ”எப்போ என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இது காலக்கொடுமையா? என்று புரியவில்லை.. நேற்று வரைக்கும் நல்லா இருந்தவர்கள் திடீரென்று இல்லாமல் போய்விடுகிறார்கள். டேனியல் பாலாஜி எனக்கு நடிப்பு ரீதியா ரொம்பவே பிடிக்கும். நான் அவரிடம் நேரம் கிடைக்கும் போது பேசியிருக்கிறேன். அவர் இன்று இல்லை என்பதை நினைக்கும் போதே பயமாக இருக்கிறது.

Advertisement

அதிலும் டேனியல் தன்னுடைய நடிப்பால் எல்லாரையும் மிரட்டி இருக்கிறார். நான் சொன்னா நீங்க எல்லாரும் நம்புவீங்களா என்று தெரியல! நான் கடந்த 10 நாளைக்கு முன்பு டேனியல் பாலாஜி படத்தை பார்த்தேன். அதாவது வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் டேனியலில் நடிப்பை பார்த்து நான் மெய் மறந்து போய் இருந்தேன். அப்போ கூட நான் அடுத்த ஜென்மத்தில் ஒரு ஆணா பிறக்கணும். அப்போதான் இந்த மாதிரி எல்லாம் கேரக்டர் பண்ண முடியும் என்று என் மனசுக்குள்ளேயே நினைச்சுட்டு இருந்தேன். அப்புறம் திடீரென்று எனக்கு அவர்கிட்ட பேசணும் போல இருந்துச்சு. உடனே என் போனை எடுத்து அவருடைய நம்பரை செக் பண்ணி பார்த்தேன்.

ஆனால் என்ன ஆச்சுன்னு தெரியல அவருடைய போன் நம்பர் டெலிட் ஆகி இருக்கிறது. அவர் நம்பர் எனக்கு கிடைக்கல. பிறகு பேஸ்புக் மூலமாக பேசலாம்னு பார்த்தேன். ஆனால், இப்போ அவர் கொஞ்ச நாளாவே பேஸ்புக்கில் ஆக்டிவா இல்ல. அது போல நேற்று கூட டிவியில் டேனியல் படம் போட்டு இருந்தாங்க. ஆனா, இன்னைக்கு அவர் இல்லை என்பதை என்னால ஏற்றுக்கொள்ள முடியல. நான் அவரோடு திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவருடைய ரசிகர்களில் ஒருவர்தான்.

பொதுவா ஒரு நடிகர் அடுத்த நடிகரின் திறமையை பாராட்டணும். அப்படி பார்த்தால் எனக்கு அவருடைய நடிப்பு பிரமிப்பை ஏற்படுத்தும். வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ராகவன் உடன் அகிலனாக டேனியல் நடித்தது என்னால் மறக்க முடியாது. அதுபோல யாருக்கு எப்போ முடிவு என்று தெரியாத வாழ்க்கையில் தான் நாம் வாழ்ந்துட்டு இருக்கோம். அதனால இருக்கிற வாழ்க்கையில் நல்லபடியா வாழனும். அது போல உடல் நலத்தை எல்லோரும் நல்லபடியா செக் பண்ணிக்கோங்க” என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Read More : Daniel Balaji | மறைந்த பிறகும் பிறர் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய டேனியல் பாலாஜி..!!

Advertisement
Next Article