For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வெள்ள நிவாரண நிதி...! தமிழகத்துக்கு ரூ.37,907.21 கோடி வேண்டும்...! தமிழக MP-க்கள் குழு நேரடியாக மனு...!

05:50 AM Jan 14, 2024 IST | 1newsnationuser2
வெள்ள நிவாரண நிதி      தமிழகத்துக்கு ரூ 37 907 21 கோடி வேண்டும்     தமிழக mp க்கள் குழு நேரடியாக மனு
Advertisement

வெள்ள நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.37,907.21 கோடியை வழங்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து தமிழக எம்.பி.க்கள் குழு நேரில் வலியுறுத்தினர்.

Advertisement

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு டெல்லியில் நேற்று சந்தித்தனர். திமுக எம்பி டி.ஆர். பாலு தலைமையிலான இக்குழுவில் கே.ஜெயகுமார், வைகோ உள்ளிட்ட எம்பிக்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் கையெழுத்திட்டு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வழங்கிய மனுவில்; கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை மிக்ஜாம் புயல் தாக்கியதை தாங்கள் அறிவீர்கள். இந்தப் புயல் மற்றும் அதனை அடுத்து ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக மூன்று மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

கடிசம்பர் 17, 18 தேதிகளில் தென் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த இயற்கை சீற்றங்களால் அரசு மற்றும் தனியார் கட்டமைப்புகள் மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நீர் விநியோக முறை, சாலைகள், பாலங்கள், மின்சார கட்டமைப்புகள் உள்ளிட்ட பொது மற்றம் தனியார் சொத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தற்காலிகமாக சரிசெய்வதற்கு ரூ.7,033.45 கோடியும், நிரந்தரமாக சரி செய்வதற்கு ரூ.12,659.24 கோடியும் இழப்பீடாக கோரப்பட்டுள்ளது. அதேபோல், தென் தமிழகத்தில் பெய்த கனமழை பாதிப்புகளை தற்காலிகமாக சரிசெய்ய ரூ.8,612.14 கோடியும், நிரந்தரமாக சரி செய்ய ரூ.9,602.38 கோடியும் இழப்பீடாக வழங்க கோரப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ.37,907.21 கோடி இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

Tags :
Advertisement